நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்

முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணையை கொண்டு வருவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “நாம் சுதந்திரத்திற்காக” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய விஜயத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திரக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி