நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு உரையாற்றிய மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா, அரசாங்கங்கள் எடுக்கும் சில முடிவுகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கமைய மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க வேண்டியுள்ளது.

செயலிலுள்ள ஆற்றலின் சிறப்பு பயன்பாடுகள் ஊடாக எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக பகுப்பாய்வு அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக வெரிட்டே ரிசேஜ் (Verité Research) நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென, அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lkஇன் பகுப்பாய்வு அறிக்கையில், 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்திய போது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் பகுப்பாய்வின் போது வழங்குநரின் உற்பத்திச் செலவு மாத்திரம் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலதிகமாக அறவிடப்படுகின்ற சமூக பாதுகாப்பு வரி போன்ற அரச வரிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவில்லை என வெரிட்டே ரிசேஜ் நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கைக்கு அடுத்ததாக தெற்காசியாவின் அதிக மின் கட்டணம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் காணப்படுகின்றது.

எனினும், இலங்கையுடன் ஒப்பிடும்போது குறித்த கட்டணம் மிகவும் குறைவாகவுள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி