இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின்

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து கலந்துரையாடியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதமொன்று நடைபெற்றது. மேலும், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினோம். இந்தியா, இலங்கையின் அயல்நாட்டு நண்பன். அதனால், சமுத்திரக் கொள்கைகளுடன் எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இந்தியா எப்போதும் இருக்கும்” என்று, ஜெய்சங்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்றைய தினம் (05) குறித்த விஜயத்தினை மேற்கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அந்த கட்சியின் செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இதன்போது உத்தியோகபூர்வமான சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி