தற்போதைய ஜனாதிபதி ஒரு கொள்கைக்கு மட்டுமின்றி அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர் எனவும், அந்த அர்ப்பணிப்புகளின்

அடிப்படையில் நாட்டிற்கு வெற்றியை பெற்றுத்தர அவர் உழைத்து வருவதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவமனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தனக்கும் எந்த கொள்கையும் இல்லை எனவும், நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் தீர்வொன்றில் தான் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் "இலங்கையை வெற்றி கொள்வோம் "மக்கள் நடமாடும் சேவை நிகழ்வுத்தட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (31) அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார் .

இங்கு வெளிநாட்டு வேலைகளுக்கான தொழில்சார் பயிற்சி வழங்குவது தொடரபாக மக்களுக்கு அறிவிக்கும் வேலைஹத்திட்டம், தொழிலாளர்களின் தொழில் கௌரவத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும் நடைபெற்றன.

இதன போது, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு விசேட சேவைகளும் வழங்கப்பட்டன.

மேலும் அமைச்சர் கூறியதாவது:

“இலங்கையையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும் சேவை அல்ல. மாறாக, நாட்டை பொருளாதார ரீதியில் உயர்த்தும் தீர்வாக அறியப்படுகிறது. இது போன்ற இரண்டு நிகழ்வுகளை காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடத்தினோம்.

“கொள்கைகளுக்கு வாக்களித்தமையலே நாடு வங்குரோத்து நிலைக்கு வந்தது. ஆனால் என்னிடம் எப்போதும் இருந்த தீர்வு, நாட்டிற்கு வெற்றியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். மக்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் வாய்ப்பிற்காக நான் நின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக்கூடிய தலைமைக்காக நான் இன்று நிற்கிறேன்.

“இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும்.  தற்போதையாய சாதகமான நிலைக்கு ஜனாதிபதி நாட்டைக் கொண்டுவந்து இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

“ரணில் விக்கிரமசிங்க கொள்கை இல்லாத முடிவுகளைக் கொண்ட தலைவர். கொள்கைகள் மாறுகின்றன. ஆனால் முடிவுகள் வளர்ந்து வருகின்றன. மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்று நான் கூறுகிறேன்.

“நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப உதவுவதற்குப் பதிலாக, அரசியல்வாதிகள், மக்களை மகிழ்விக்கும் முடிவுகளை எடுத்தார்கள். இப்போது இரு தரப்பும் சமநிலையில் உள்ளன. யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் வரை இந்த நாட்டில் ஒரு முறை மாற்றத்தை ஏற்படுத்த யாரும் இருக்கவில்லை. வீழ்ந்த பிறகுதான் இவர்கள் மாற்றத்தை உட்படுத்த முனைகிறார்கள். அந்த நேரத்தில்தான் மாற்றத்தை உட்படுத்த உழைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பு கிடைத்தது. எண்ணெய் எரிவாயு வரிசைகள் இல்லது போனது.

“நிதி ஒழுக்கு ஏற்படுத்தப்பட்டது. அதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டது பொருளாதாரப் பேரழிவிலிருந்து நாட்டை மீட்பதற்கான தொலைநோக்குப் பார்வையை ஜனாதிபதி எமக்குக் காட்டியுள்ளார். நாங்கள் சொர்க்கத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. அடிமட்டடத்திலிருந்து அரசியல் செய்து வருபவர்கள் அதனாலே களத்தில் அரசியல் செய்ய விரும்புகிறோம்.

“வெளிநாடு வாழ் தொழிலார்கள் சட்டரீதியாக பணத்தை வங்கி மூலம் நாட்டுக்கு கொண்டு வரும் முறையை முதலில் உருவாக்கி நாட்டுக்கு வரும் டொலர்கள் அரசியல்வாதிகல் கொள்ளையடிக்கின்றனர் என்ற பொய்குற்றச்சட்டி இல்லாதொழிக்கப்பட்டது.

"ஹோப் கேட்: என்ற பெயரில் விமான நிலையத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக தனி கேட்டை திறந்தோம். நாட்டிற்கு டாலர்களை அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம்: "மனுசவி" கடன் திட்டம். ஓய்வூதியத் திட்டம் மற்றும் முதன்முறையாக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மானியம் வளங்கள் போன்றன சொட்த்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுள்ளது

“இந்த ஆண்டு தொழில் முனைவோரை மேம்படுத்தும் ஆண்டாக பெயரிடப்பட்டு, வெளிநாட்டில் இருந்துவரும் தொழிலாளிகளை தொழில்முனைவோராக உயர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க 22 மில்லியனை வழங்கியுள்ளோம், நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் செய்து வருகிறோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி