பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்தேச சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.

கைதி ஒருவரை துப்பாக்கி கொண்டு மிரட்டியமை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதுடன், இந்த சம்பவத்தினால் லொஹான் ரத்வத்தே பதவி விலகல் செய்திருந்தார்.

இந்நிலையில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி