இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த அவரது பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள்

அனுராத ஜயக்கொடி, பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, “அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93இன் பிரகாரம், பதவி உயர்வு நடைமுறையின் அடிப்படையில், பதில் பொலிஸ் மா அதிபரினால், நேற்று முன்தினம் (25) முதல் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால், அனுராத ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வாகன விபத்தில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி