கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இதில்

பங்கேற்பதற்காக இம்முறை தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த 8,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கையில் இருந்து 4,000 பேரும் தமிழகத்தில் இருந்து 4,000 பேரும் என மொத்தம் 8,000 பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வாக வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்களுக்கு நேற்றையதினம் (25) முதல் விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கச்சதீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேற்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை வழங்க முடியும் என ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி