பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல

பாடகர்கள் அடங்கிய குழுவினர், நேற்றைய தினம் (24)  மாலை இலங்கையை வந்தடைந்தனர்.

இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த பாடலைக் கேட்காத தமிழர்கள் இலங்கையிலும் உலகிலும் இல்லை என்றார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே, இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா “நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இவருடன் தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினரும் நேற்று (24) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.

கொழும்பில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறும் 'இளையராஜா Live in concert' பங்குபற்றுவதற்காகவே இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,”நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும். இது கடவுள் கொடுத்த வரம்” என கூறியுள்ளார்.

மேலும் இவரின் இசை நிகழ்ச்சியில் பாடகர் மனோ, பாடகர் மது பாக்கிருஷ்ணன், பாடகி விபாவரி, பாடகி ஸ்வேதா மோகன், பாடகி ஸ்ரீஷா விஜயசேகர், பாடகி அனிதா கார்த்திகேயன், பாடகி சுர்முகி ராமன், பாடகி பிரியா ஹிமேஷ் மற்றும் பாடகர் S. P.சரண் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி