தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் 'எங்கள் மக்கள்

கட்சி' என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஸ்கொட சுஜி தலைமையிலான பாதாள உலக குழுவுக்கும் இவருக்குமிடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

குடாவெல்லையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்த சமன் பெரேரா, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி