மேஷம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

ரிஷபம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

மிதுனம்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள்.  உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் அவர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்

உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும் முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். உறவினர்களுடன் முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.

மகரம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

எதிர்ப்புகள் அடங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கும். வீண்வாதங்களில் ஈடுபட வேண்டாம். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனங்களை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி