தென்னிலங்கையில் கட்சி மாறுபவர்களை அரவணைப்பதால் கட் சிகளுக்குள் பெரும் பிரச்சினை.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸஇ மொட்டுக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்இ கலாநிதி நாலக்க கொடஹேவா போன்றோரை தமது அணியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

இந்த வரிசையில் பேராசிரியர் சன்ன ஜயசுமணவும் சஜித் பக்கம் விரைவில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ந்த இணைப்பு ஐக்கிய மக்கள் சக்திக்குள் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. மேற்படி மூவரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவுக்கு, அவரது ஆட்சிக் காலத்தில் 'கயிறு' கொடுத்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

கோட்டாபயவை பொருளாதார துறையில் தவறாக வழிநடத்தியவர் கலாநிதி நாலக கொடஹேவா எனக் கருதப்படுகின்றது. அவரைக் கட்சிக்குள் உள்வாங்குவதை இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கு ஆதரவாக பொருளாதார விடயங்களை எடுத்துரைத்துப் பிரசாரப்படுத்தி வந்த கலாநிதி ஹர்ஷா டி சில்வா, இரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் போன்றோர் கடுமையாக எதிர்கின்றனர்.

கொவிட் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைக்கும் படியான தீவிர நிலைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்தமைக்கு பின்னால் இருந்த முக்கிய சூத்திரதாரி சன்ன ஜயசுமண என்று கூறப்படுகின்றது.

அவரை ஐக்கிய மக்கள் சக்தி அணியின் கூட்டணிக்குள் உள்வாங்குவதை அந்தக் கூட்டணியில் உள்ள ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் கட்சியினரும் கடுமையாக எதிர்க்கின்றனர் எனத் தகவல்.

அதே சமயம் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுதரப்புக்கு குத்துக்கரணம் அடித்துள்ள வடிவேல் சுரேஸூக்கு அரசுத் தரப்புக்குள் முக்கியத்துவம் கொடுக்கின்றமை ஏற்கனவே ஜனாதிபதி ரணிலுக்கு முண்டு கொடுத்து நிற்கும் மொட்டு கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் சுதந்திரக் கட்சியில் இருந்து ரணில் தரப்புக்கு மாறியுள்ள சம்பத் திசநாயக்காவுக்கும் ஆளும் தரப்புக்குள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றினால் அதிருப்தி அடைந்துள்ள பதுளை மாவட்டத்தின், மொட்டுக் கட்சி பிரதிநிதியான நகர அபிவிருத்தி, வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் தேனுகா விதான கமகே சீற்றத்தில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவர் விரைவில் எதிர்க்கட்சிகள் பக்கம் போய் இருப்பார்கள் என்று விடய மறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

-காலைமுரசு

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web