எமது கண்ணெதிரே அழிவடைந்துள்ள இந்தத் தேசத்தை மீள கட்டியெழுப்பாவிட்டால் நாம் மனிதர்கள் அல்ல என நாடாளுமன்ற

உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி தொகுதி மாநாடு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம்  சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருநாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப்போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தேர்வு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்.

“மேலும், அநுராதபுரத்தில் எஸ்.எம்.சந்திரசேனவும் தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் பலவந்தமாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவர்கள் அல்லர். நாட்டு மக்களின் வாக்குகளாலேயே இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். எனவே, சீரழிவு பொருளாதாரத்தில் மாத்திரமா இருக்கிறது?

“எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன. எனவே, எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். நாம் ஒரு தீர்வுகட்டமான திருப்புமுனைக்கு வந்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களினால் இன்று நாட்டில் அரிசி, எரிபொருள் மற்றும் ஔடதங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தோன்றியுள்ளது. கடன் செலுத்தமுடியாத நாடாக மாறியிருக்கிறோம். வாழமுடியாத ஒரு நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.

“சட்டம் அமுலாக்கப்படாத, ஒழுக்கமில்லாத, போதைவஸ்துக்கள் நிரம்பிய மற்றும் குற்றச்செயல்கள் மலிந்த ஒரு நாடே இன்றைய பெறுபேறாக இருக்கிறது. இதே பயணப்பாதையில் சென்று நாம் செத்து மடியப்போகிறோமா? இல்லையென்றால் ஒன்றாக எழுச்சிபெற போகின்றோமா? மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

“எம்மிடம் சுலபமான வழியும் இருக்கிறது. அதாவது, எவ்வித பிரச்சினையும் இன்றி எல்லோரும் இதே அழிவுப் பாதையில் சுடுகாட்டை நோக்கி பயணிக்கவும் முடியும். இல்லையென்றால், நாம் திடசங்கற்பத்துடன், ஒன்றாக எழுச்சிபெற வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை நிராகரித்து நாம் எழுச்சி பெறுவோம் என்ற பிரேரணையை முன்வைக்கவே கண்டி நகரில் நாமனைவரும் திரண்டிருக்கிறோம்.

“இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இதைவிட எவ்வாறன பெலென்ஸ் சீட் கிடைக்கப்போகிறது. எந்த துறையில் நாம் வென்றிருக்கிறோம். எந்த துறையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த துறையை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று எவராவது கூறமுயுமா? இப்பொழுதும் நீங்கள் விழித்தெழாவிட்டால் இனி ஒருபோதுமே எழுச்சிபெற மாட்டீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web