ஊவா, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது.

மழையுடனான வானிலையால், 7 மாகாணங்களில் 33,687 குடும்பங்களைச் சேர்ந்த 109,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 1587 குடும்பங்களைச் சேர்ந்த 4981 பேர் இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிகுராக்கொட நெல்பர பிரதேசத்தில் களிமண் வீடு ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த அந்தத் தாயின் கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தை, பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடை மழையினால் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

12 வருடங்களின் பின்னர், அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் பெருக்கெடுப்பு மற்றும் அம்பாறை நீர்த்தேக்கம் மற்றும் கொண்டுவடுவான நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறை - இங்கினியாகல பிரதான வீதி, சுதுவெல்ல பகுதியில் மூடப்பட்டுள்ளது.

மேலும், கல் ஓயா, மொரவில் ஓயா, பல்லன் ஓயா மற்றும் எக்கக் ஓயா ஆகியன நிரம்பி வழிவதால் அம்பாறை - ஹிங்குரான வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தீகவாபிய புண்ணிய பூமியின் ஒரு பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இதுவரை 1197 குடும்பங்கள் இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை – கொழும்பு வீதியின் 7ஆம் மைல்கல் பகுதியான ஹாலிஎல - உடுவர மண்மேடொன்று சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தப் பாதையைச் சீர் செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஹலிலெல - கடவல வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதுடன், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

லுணுகல - பிபில A5 பிரதான வீதியின் அரவகும்புர பிரதேசத்தில் பாறைகள் மற்றும் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், அவ்வீதியினூடான போக்குவரத்து, முற்றாக தடைப்பட்டுள்ளது.

நாட்டின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான மட்டக்களப்பு உறுகாமம் குளம் மற்றும் ருகம் குளத்தில் தலா மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மழை காரணமாக மட்டக்களப்பு புகையிரத பாதை உட்பட பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இன்று இரவு இயக்கப்படவிருந்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், பல குளங்களும் நிரம்பி வழிகின்றன.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால், துமுடுலுகல பிரதேசத்தில் உள்ள பாறை ஒன்றில் நிர்க்கதியாகியுள்ள மூன்று யானைகள், அங்கேயே தங்கியுள்ளதைக் காணமுடிந்தது.

மல்வத்து ஓயா நிரம்பி வழிவதால் திரப்பனை எருவெவ கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி