ஹோமாகம - கட்டுவான பிரதேச கைத்தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிற்சாலையொன்றிலிருந்து புகை வெளியேறிவருவதாக

பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹோமாகம பொலிஸார், தற்போது நிலவும் பனிமூட்டமான சூழ்நிலையில் குளோரின் சேர்க்கப்பட்டுள்ளதென்று குறிப்பிட்டனர்.

இது குறித்து தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். .

சூரிய ஒளி சீராக இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும் அதுவரை புகை மூட்டமாக காணப்படுவதால் முகக்கவசங்களை முறையாக அணிந்து செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த ரசாயன தொழிற்சாலையில் ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று இரவும் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web