உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள், கடந்த 25ஆம் திகதியன்று, கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடினர்,

இலங்கையர்களும் இந்நாளில் பக்தியுடன் 'க்றிஸ்மஸ்' கொண்டாடினர்.

'அமைதியின் இளவரசர்' என்று உலக மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் யேசு கிறிஸ்துவின் தனித்துவமான பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25ஆம் திகதி க்றிஸ்மஸ் தினமாகும். மார்கழிக் குளிரில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்த யேசு க்றிஸ்து, உலக அமைதியை நிலைநாட்ட தனது இன்னுயிரை தியாகம் செய்த மரியாதைக்குரிய மத போதகராவார்.

இலங்கையின் பிரதான கிறிஸ்மஸ் ஆராதனையானது கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில், பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவரது உரையில் வழக்கமான அரசியல் இருந்தது. அடுத்த ஆண்டு தேசிய தேர்தல் ஆண்டென்பதால், க்றிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போதும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் முக்கிய தலைப்பு.

செய்திகளின்படி, கட்சிகள் பலவற்றின் முக்கிய தலைப்பு ஜேவிபி தலைமையிலான திசைகாட்டி ஆகும். ஜேவிபி வெற்றிபெற்றார் நாட்டை விட்டுச்செல்ல நேரிடுமென்று சிலர் மிகவும் பயப்படுகிறார்கள். ஆனால், ஒரு மாறுதலுக்காக திசைக்காட்டிக்கும் வாய்ப்பளித்துப் பார்ப்போம் என்று சிலர் கூறுகின்றனர்.

நத்தாரின் சிவப்பு வர்ணமும், ஜேவிபிக்கு வேலைபார்க்கும் நேரம் கனிந்திருக்கிறது. நத்தார் விடுமுறையென்றுகூட பார்க்காம், திசைக்காட்டியினர் களத்தில் இறங்கிப் பணியாற்றுகின்றனர். கடந்த வாரத்தில், தொகுதிவாரிக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோன்று, மாவட்ட மட்டத்தில் தமது தொழிற்சங்கங்களை பலப்படுத்தவும் புதிய கூட்டணியொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திசைக்காட்டியின் தேர்தல் ஆயத்தங்களின் ஆரம்ப கட்ட வேலைத்திட்ட பொறிமுறையானது 2023 டிசம்பரில் நிறைவடையவுள்ளது. அநுர இம்முறை வெற்றி பெறுவது உறுதி என திசைக்காட்டியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில், வேட்பாளராகப் போட்டியிட மாட்டார் என்றும் அவர்கள் ஏற்கனவே கணக்கிட்டுள்ளனர். ஐமசவும் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்றாக உடைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, திசைகாட்டிக்கான களம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கையின் அரசியலில் சிறிது மாற்றம் ஏற்பட பெருமளவில் வாய்ப்பிருக்கிறது. எனவே காத்திருப்போம்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web