வீடமைப்பு திட்டம் என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடும் நாடளாவிய பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பில் ஆராயப்பட்டு

நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (28) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுத்திட்ட பயனாளர் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் முன்னேற்ற நகர்வுகள் தொடரில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டது.

இந்நிலையில் 5 மில்லியனுக்கே வீடு கட்ட முடியாதென குறை கூறிக்கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநரும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி சாள்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக ஒரு மில்லியன் திட்டத்துக்கு 403 பயனாளரும் 6 இலட்சம் திட்டத்திற்கு 101 பயனாளரும் கோரியுள்ளதாக துறைசார் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது

இதில் ஆறு இலட்சம் திட்டம் என்பது தற்போதைய சூழ் நிலையில் சாத்தியமானதென்று அல்ல. இதனை குறைந்தது பதினைந்து இலட்சமாக உயர்த்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அதுவரை குறித்த இரு திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேநேரம்  எந்தவொரு திட்டமும்  பயனாளரின் விருப்பின்றி வழங்கப்படாது என சுட்டிக்காட்டிய ஆளுநர் மற்றொரு திட்டமான  25 ஆயிரம் சூரிய மின்கலம் பொருத்திய வீட்டு திட்டத்திற்கு பயனாளிகள் பட்டியல் கிடைக்கவில்லை என்றும் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசென்ற பின்னரே அவர் பிரதேச செயலகர்களுடன் அது தொடர்பில் கலந்துரையாடி தெளிவுறுத்திய பின்னர் அதற்கான பயனாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் வீடு அற்றவர்களாக இருக்கின்ற நிலையில் இதில் 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு கொடுத்துள்ளதாகவும் அதற்காக இதுவரை 8957 பேரது பெயர்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

ஆனாலும் இந்த வீட்டு திட்டம் யாழில் சாத்தியம் இல்லை என்று மக்களை குழப்பும் நிலை காணப்படுகின்றது. சுமார் 1000 சதுர அடி கொண்ட குறித்த வீட்டுத் திட்டமானது கூரை சூரிய மின்கலம் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுடிக்காட்டப்பட்டது.

இதேவேளை வடக்கின் ஏனைய மாவட்டத்திற்கு 15 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்தபோதும் அம்மாவட்டங்களிலிருந்து 18 ஆயிரத்துக்கு அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

இது காணியிருந்தும் வீடற்ற மற்றும் கட்டப்பட்டு அரைகுறையாக இருக்கும் வீடு என அயனாளர்கள் உள்வாங்கப்பட இருப்பதுடன் சூரியகலம் கூரையில் பொருத்தல் மக்களிடம்.அச்சத்தன்மை இருக்க கூடாது எனவும் அவ்விடயம் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டே திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் யாழ் நாடாளுமன்ற உறுபினர்களை அழைத்து பிரத்தியேக கூட்டம் வைத்து விரிவாக ஆராய்வதாகவும் அதன் பின்னர் அதற்கான அனுமதி கொடுப்பதாகவும் தீர்பானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web