இலங்கையில் சுமார் 31,000 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 4,000 பேர் காணாமல் போன சுனாமி பேரழிவிற்கு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சுனாமியால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் சுனாமி ஏற்பட்டால் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கும் வகையில் சுனாமி கோபுரங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த 77 கோபுரங்களில் 57 கோபுரங்கள் செயலிழந்துவிட்டன.

இதேவேளை, அனர்த்தம் ஏற்பட்டால் மக்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தால், கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய தொலைபேசிச் சேவைகள் ஊடாக செய்திகளை வழங்கும் முறைமை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால் கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய தொலைபேசிச் சேவைகள் ஊடாக செய்திகளை வழங்கும் முறைமை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த நாட்டில் சுனாமி ஏற்பட்டது.

இதனால், சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

மதச்சார்பற்ற விழாக்களுக்கு முன்னுரிமை அளித்து தேசிய பாதுகாப்பு தினத்தை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று (26), பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் பரேலிய சுனாமி நினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி