சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் 'தேசிய பாதுகாப்பு

தினம்' நாளை (26) அனுஷ்டிக்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டி சுனாமியில் 35,000க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாளை கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web