மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவுடன், 10 பேர் கொண்ட

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் அடங்குவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் மொட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் சுயேட்சை எம்.பி.க்களாக செயற்படுவதாக அறிவித்திருந்தனர். தமது அரசியல் எதிர்காலம் குறித்து தம்மிக பெரேராவுடன் கலந்துரையாடிய போதிலும், கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மொட்டுக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக பெரேராவே என அரசியல் செய்திகள் பரவி வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பொஹொட்டுவ பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web