முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை

நடைமுறைப்படுத்த போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றில் வைத்து இன்று (13) அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே, தற்போதைய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனு தொடருமா, இல்லையா என்று, எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாகக்  கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ “225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றிய போதே ஹரீன் பெர்னான்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹரீன் பெர்னான்டோ மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.சி.சி. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்துள்ளது. இதனை விலக்கிக் கொள்ள நாம் அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இந்நிலையில், பிரபலமாவதற்காக கிரிக்கெட்டில் ஊழல் உள்ளதாக கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. இங்கு நாடாளுமன்றில் கூறும் கருத்துகளை ஐ.சி.சி ஏற்றுக்கொள்ளாது.

“இதனை புரிந்துக் கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இங்கே இருப்பதை நினைத்து நான் கவலையடைகிறேன். நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர்தான் இல்லாது போயுள்ளது.

“கிரிக்கெட் சபையில் பல பிரச்சினைகள் உள்ளன. நான் கடந்த காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோதும் கூட, இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைக்க 3, 4 தடவைகள் முயற்சித்தேன்.

“ஆனால், ஐ.சி.சி இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டது. இந்த நிலையில், நாம் சித்திரஸ்ரீ அறிக்கைக்கு இணங்க விளையாட்டுச் சட்டத்தை முதலில் மாற்றியமைக்க வேண்டும்” என்று, ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி