நல்லிணக்கம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இன்று பிற்பகல் நடத்தவிருந்த பேச்சு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3 மணிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பிக்களை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி சந்தித்துப் பேசவிருந்தார்.

நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று 11.12.2023ஆம் திகதியிடப்பட்டிருந்த அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனாதிபதியுடனான இந்தக் கலந்துரையாடல் இன்று நடைபெறமாட்டாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை 12.12.2023ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் நேற்று அனுப்பி வைத்துள்ளது.

(காலைமுரசு)


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி