2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அணி, விமல் அணி என்பன எதிராக வாக்களித்தன. நவம்பர் 22ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் நாளை 13ஆம் திகதி புதன்கிழமை வரவு - செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி