கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது விளையாட்டு அமைச்சரின் பதவி பறிபோனதற்கு பின்னர், அந்தப் பதவியைப் பெற்றுக்கொள்ள

பலரும் காத்துக்கொண்டிருந்தமை இரகசியமல்ல.

உரிமையாளர்கள், வாரிசுகள், கோல்மூட்டிகள் எனப் பலரும் இதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோதும், இறுதியில் வரவு செலவுத்திட்டத்துக்குப் பின்னர்தான் இறுதி முடிவு எட்டப்படுமென்று நாட்டின் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் அதற்கு முன்னர் இவ்விரு அமைச்சுக்களையும் நடத்த வேண்டும் என்பதோடு, பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமென்ற காரணத்தால்தான், ஹரின் மற்றும் பவித்ராவுக்கு இவ்விரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், வரவு செலவுத்திட்டத்துக்குப் பின்னர் இவ்விரு பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

மேல் நாட்டில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியும் மாவட்டத் தலைவர் ஒருவரும் அந்த இரண்டு பட்டங்களையும் பிடிக்கத் திட்டம் வைத்திருப்பதாகவும் கேள்வி.

அதைத்தான் நாங்கள் சொல்கிறோம், அரசியல்வாதிகள் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும்வரை மாத்திரம்தான் உணர்ச்சிமிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று.

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அப்படிச் செய்வோம், இப்படிச் செய்வோம் என்று சொல்பவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின்னர் வேறு கதைகளைச் சொல்வார்கள்.

இது, தமிழ்த் திரைப்படமொன்றில் காணப்பட்ட கிராமத்துக் காட்சியில், பாரிய மலையொன்றை அகற்றித் தருகிறேன் என்று சொல்லும் காமெடி நடிகர் செந்தில், கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த மலையைத் தூக்கி தன் தோல்மேல் வைக்குமாறு கூறுவதைப்போல் அமைந்துள்ளது.

அதனால், எமது அரசியல்வாதிகளின் கதைகளில் சிக்கிக்கொண்டால், நிம்மதி இல்லை, ஏமாற்றமே மிஞ்சும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி