அரசாங்கத்தின் நிதியை தனியார் நிறுவனங்களுக்கு பயன்படுத்தியதாக கணக்காய்வு அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரென, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசார நிதியத்தின் பணம் தொடர்பான விவாதத்தில் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தானந்தவுக்கு சவால் விடுத்து வெளியேறினார். இதன்போது, “ராஜினாமா கடிதத்தை தயார் செய்வதற்காகச் செல்கிறார்போல” என்று, மஹிந்தானந்த கிண்டலடித்தார்.

இதற்கு மத்தியில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அனைவரும் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் ஏன் அங்கே செல்கிறார்கள் என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் செய்தியொன்றை எடுத்துக்கொண்டுதான் அவர் அங்கு சென்றிருக்கிறார்.

நடப்பவற்றைப் பார்க்கும்போது, அந்தக் கதைகள் உண்மையாகவும் இருக்கலாம். காரணம், ஐதேக, ஐமச ஆகிய இரண்டும் பிரிந்து தேர்தலில் நின்றால், இரு தரப்பும் அவ்வளவுதான் என்று, இரு கட்சிகளின் தலைவர்களும் பேசத் தொடங்கியுள்ளனர்.

இல்லாவிடின், திசைக்காட்டிக்கு அரச அதிகாரத்தை தாம்பளத்தட்டில் வைத்து கொடுப்பதைப் போலாகிவிடும் என்று அச்சப்படத் தொடங்கியுள்ளனர். இந்தக் கதையை இரண்டு பக்கங்களுக்கும் மலிக்தான் எடுத்துச் செல்கிறார்.

இவர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நண்பரும் சஜித்துக்கு நெருக்கமானவருமாவார். அப்படியென்றால் அடுத்த அரசாங்கத்தின் சூத்திரதாரியாக விளங்குபவர் மலிக்கா? அதைச் செல்ல இன்னும் காலநேரம் இருக்கிறதல்லவா?


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி