“விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப்

பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது” என்றார்.

“ஆனால், நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள்.

அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. சட்டம் தன் கடமைமையச் செய்யும். நீதிமன்றம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கவனத்தில்கொண்டுசெயற்பட வேண்டும்” என்றார்.

கடந்த மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி