'எதிரியே பாராட்டிப் புகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போலிக் காணொளிகளை வெளியிட்டுக்

கேவலப்படுத்துவது எமக்கு மனக் கவலையளிக்கின்றது” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் துவாரகா எனும் பெயரில் மாவீரர் தினத்தில் போலிக் காணொலியொன்று வெளியானமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னகூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்து பேசியுள்ளார். பிரபாகரனுடன் தனக்குக் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவர் ஒரு நேர்மையான போராளி எனக் கமல் குணரத்ன எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக எதிரியே பாராட்டிப் புகழும் தலைவரைப் போலிக் காணொளிகளை வெளியிடுவதன் மூலம் கேவலப்படுத்து வது எமக்கு மனக் கவலையளிக்கின்றது” என்று மனோ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி