கலாநிதி மஹியா குணசேகர தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய விளையாட்டுப் பேரவையை விளையாட்டுத்துறை

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க இதன் தலைவராக முன்னர் பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட குறித்த தேசிய விளையாட்டுப் பேரவையில், செயலாளராக ஐ.யு. விக்கிரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீயானி குலவன்ச, ராஜித அம்பேமொஹொட்டி, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, பாண்டுக கீர்த்தினத, ஜி.ஜி.புஞ்சிஹேவா, மாலிக் காதர், எஸ்.வி.டி. நாணயக்கார, ஹபீஸ் மர்சோ, சிதாத் வெட்டிமுனி, ஜகத் ஜயசூரிய, அனுராதா இல்லபெரும, ஷெமல் பெர்னாண்டோ, கமல் தேசப்பிரிய ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

இதனிடையே, தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில், அர்ஜுன் ரிஷய பெர்னாண்டோ, மஹியா குணசேகர, சுரேஷ் சுப்ரமணியம், நளிந்த சம்பத் இளங்ககோன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி