Feature

இன்று (30) கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Feature

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள்

Feature

நாட்டில் சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட

Feature

“அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை என்று, இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

“மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை மூலமாக சமூகச் சீரழிவை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். இது தொடர்பில் பலவிதமான வேலைத்திட்டங்களைப் பல காலமாகச் செய்து வருகின்றோம்.

“அரசியல் இலஞ்சமாக சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய மதுபான சாலைகள் வழங்கப்பட்டமை பிரதான விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். அதில் தமிழ் அரசியல் வாதிகள் சிலர் சம்பந்தப்பட்டிருந்தார்கள், தாமாகவே தேர்தல் அரசியலிலிருந்து விலகினார்கள். ஆனால், பலர் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

“ஆகவே, இது தொடர்பாக மக்கள் தமது கரிசனையைச் செலுத்தவேண்டும். அரசி யல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக்கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.

“தங்களுடைய சொந்த நலன்களுக்காகச் சொத்துக்களைக் குவிப்பதற்காகப் பலர் இவ்வாறு செயற்படுகின்றார்கள். அவர்களை அடையாளம் கண்டு, மக்கள் சரியான விதத்தில் செயற்படவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்றார்.

Feature

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால்,

Feature

2024ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213ஆக அதிகரித்துள்ளதாக, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரித்த 167 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, ​​குறிப்பிடத்தக்க குறைவு அல்லது அதிகரிப்பு எதுவும் இல்லை. உதாரணமாக, இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக பதிவாகின்றது.

இதில் 16 வயதிற்கு குறைந்த காதல் உறவால் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக  சம்பவங்களே பெரும்பாலானவை ஆகும். அதாவது இது  விருப்பப்படி நடப்பவையாகும்.

2023இல் 1,237, 2024இல் 1,254 ஆக பதிவாகியுள்ளன. ஆனால், 2023இல் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 167 பதிவாகியுள்ள நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 213 ஆக அதிகரித்துள்ளது.

இதனால்  இந்த சிறுமிகள் பாதிக்கப்படுவதோடு பிறக்கும் குழந்தையும் பாதிக்கும். இந்த சிறுமிகள் பெரும்பாலும் கல்வித் துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். "இந்த நிலைமை குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டும்." என்றார்.

அத்துடன் சிறுவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023 இல் 103 ஆகவும், 2024 இல் 123 ஆக அதிகரித்துள்ளதாகவும் ரேணுகா ஜயசுந்தரா மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி