leader eng

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம் தம்பதியினர், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேக நபரின் சாரதியாக இருந்தவர் ஆகியோர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது உயிரிழந்த சிறுமியின் தாயார் உட்பட சுமார் 100 பேர் நீதிமன்றத்திற்கு முன்பாக காலி வீதியில் வரிசையில் நின்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்த சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும், பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும், தரங்குறைந்த கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 30 நிமிடங்கள் இவ்வாறு மௌனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக களுத்துறை நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை காணப்பட்டது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி