ஒன்பது வளைவுகள் பாலத்தின் ஒளிரும் காட்சிகளைக் காட்டும் வகையிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இந்த விடயத்தின்
உண்மைத் தன்மையை அறியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாலத்தை பார்ப்பதற்காக வருகைத்தந்து ஏமாற்றமடையும் செய்தியொன்று வௌியாகியுள்ளது.
இருப்பினும், அந்தப் பகுதியில் ஒரு விசேட மின்விளக்கு அமைப்பு உருவாக்கப்பட்டு வந்தாலும், அந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லை.
Nine Arch Bridge என்ற இந்த ஒன்பது வளைவுப் பாலமானது, எல்ல சுற்றுலா வலயத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்த சுற்றுலாத் தலமாக காணப்படுகிறது.
இந்தப் படைப்பின் தனித்துவத்தை காண்பதற்காக ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஒன்பது வளைவுகள் பாலத்தையும் அதன் ரயில் சுரங்கப்பாதையையும் மின்விளக்குகள் கொண்டு ஒளிரச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தற்போது ஒரு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, ஔிரும் வகையில் காட்சிபடுத்தப்பட்ட ஒன்பது வளைவுகள் பாலத்தைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன, இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதை உண்மையென நம்பி இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.