கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருகோணமலைக்கும், திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில்

நிலையத்திற்கும் வரும் இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தளாய், அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

(பின்னிணைப்பு)

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதம் இன்று தடம் புரண்டது.

இதனால் அக்போபுரா பகுதியில் வைத்து 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி