எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சிறிய அளவிலும் பொருட்களை தயாரிக்கும் தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி

இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ம் திகதி வரை வீதியோரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் ஒப்புதலுடனும் மேற்பார்வையுடனும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் இவ்வாறான விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு தற்காலிகமாக விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி