leader eng

வன்முறை இல்லாத சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை

விடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வன்முறை மூலம் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

மக்களின் ஆதரவை பெற முடியாத காரணத்தினால், வன்முறை, அவதூறு பரப்புதல் மற்றும் சேறுபூதல் மூலம் மக்களின் ஆதரவை பெற முடியும் என அவர்கள் நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் இந்த நிலைமைக்கு வந்துள்ளமை குறித்து நாங்கள் கவலையடைகின்றோம். சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்படியான கீழ் நிலைக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பாக பொதுஜன பெரமுனவினர் பணத்தை வாரி இரைத்து வருகின்றனர். அவர்கள் அந்த பணத்தை பிரசாரத்திற்கு செலவிட்டால் பரவாயில்லை. சேறுபூசவும், அவதூறு பரப்பவும் செலவிடுகின்றனர். இவற்றின் மூலம் சஜித் பிரேமதாசவின வெற்றியை தடுக்க முடியாது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தமது வேட்பாளரின் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டு வரும் அதிருப்தியில் ஆத்திரமடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வன்முறைகளை நிகழ்த்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் அமில அபேகோன், அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுஜன பெரமுனவின் வன்முறையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான இவர்கள் தற்போது தங்காலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி