leader eng

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் சகோதரர் முறைப்பாடு அளித்துள்ளார்.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் தகரங்களை அகற்றுவதற்காக அழைக்கப்பட்டு பின்னர் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (09.08.2025) இடம்பெற்றுள்ளது.

முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினர், இராணுவ முகாமிற்கு தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் (07.08.2025) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்தே இன்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுவம் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்றுமுன்தினம் இரவு ஐவர் சென்றுள்ளனர்

இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களை தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்த போதும் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த குறித்த இளைஞர் தப்பி ஓடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனின் சகோதரரால் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத்தினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து விட்டு இன்றையதினம் அதிகாலை குளத்தில் போட்டுள்ளதாக இறந்தவரின் சகோதரர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி