அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர்

எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து, எதிர்வரும் 10ஆம் 11ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், ஜனாதிபதிக்கும் தமிழத் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், அதற்கு முன்னாயத்தமாக, நாளைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது அவருக்கு விளக்கியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி