முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய
பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன், ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாகப் பேச வேண்டுமென்று, குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தமையே இந்த இடமாற்றத்துக்குக் காரணமென்று கூறப்படுகிறது.
பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, இன்று வியாழக்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இவர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.