வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 65 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை தாமரை மொட்டு கட்சியினால்

வெற்றி கொள்ள முடியாது போனால் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என அக்கட்சியின் முக்கியஸ்தர்களது கருத்தாக உள்ளது.

முற்றாகவே சிங்கள மக்களைக் கொண்ட எல்பிட்டி பிரதேச சபை எல்லையானது ராஜபக்ஷக்களுக்கு சாதகமான பிரதேசாகக் கருதப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு குறைந்தளவிலேயே உள்ளதால் அவரது வெற்றிக்கு சிங்கள வாக்காளர்களின் 65 வீதத்திற்கும் அதிகமானோரின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை என அக்கட்சியின் கணிப்பீட்டு நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை முன்னோடிச் சோதனையாகக் கருதி ஒக்டோபர் 11ம் திகதி 65 வீதத்திற்கும் அதிக வாக்குகளுடன் மொட்டு கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிகளைச் செய்யுமாறு அக்கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி