தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கண்டி வடக்கு ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் நவயாலதென்ன பிரதேசத்துக்கு குழாய்நீர் இணைப்பு வழங்கப்படவுள்ளதால் நாளை (18) வியாழக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் நாளை மறுதினம் (19) காலை 7 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய கீழ்வரும் குறித்த காலப்பகுதியில் கீழ்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உடதலவின்ன
  • வத்தேகெதர
  • கங்கா மாவத்தை
  • நவயாலதென்ன
  • சரசவி மாவத்தை
  • கலதெனிய
  • இந்திரா மாவத்தை
  • பல்லேதலவின்ன
  • உஸ்ஸியாகொட
  • வத்தளவத்தை
  • பொல்கொல்ல

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி