மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை ஒழுங்கான முறையில் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவினங்களை நிர்வகித்தல் போன்ற பொறுப்பு ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சவாலான காலகட்டத்தில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதன் மூலம் பொதுச் சேவைகளை உகந்த மட்டத்தில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்கண்டு கொள்வதிலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி அலுவலகத்துடனும் ஆளுனர்கள் நல்ல ஒருங்கிணைப்பை பேண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தமது மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் மாகாண சபையின் ஊடாக அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் வழமையான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும் மாகாண ஆளுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி வருவதாகவும் குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி