இங்கிலாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின், இலங்கை தொடர்பான பயண நிலைப்பாடுகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



இதில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் இலங்கைக்கு செல்வதற்கு எதிராக தங்கள் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன.

பொருளாதார நெருக்கடி மோசமடைதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மைக்கான சாத்தியக்கூறுகள், இதற்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளன.

அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, அயர்லாந்து ஆகியவை, சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளைத் தொடர்ந்து பேணப்படுகின்றன.

எனவே இந்த நிலைப்பாடு, நாட்டில் ஏற்கனவே பின்னடைவைக் கண்டுள்ள சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

எனினும் அத்தகைய எச்சரிக்கைகளின் தாக்கத்தை முடிந்தவரை 'மென்மைப்படுத்த' நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 32,856 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்தனர்.

இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது ஒரு சிறிய அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

2022 இன் முதல் பாதியில், மொத்தம் 411,337 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்தனர்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி