அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் புதிய பாப்பரசராகவும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் அவர் போப் லியோ XIV என்ற பெயரைப் பெற்றுள்ளார். இது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூட்டத்தினரிடம் ஒரு மூத்த கார்டினலாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
69 வயதான போப் லியோ, அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது போப்பாக வரலாறு படைத்தார். அதன்படி, உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க சமூகத்தை போப் லியோ வழிநடத்துவார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நித்திய இளைப்பாறுதலை அடைந்த நிலையில், புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
88 வயதான போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 அன்று வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டமையை, முன்னதாக அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள சென். பீட்டர்ஸ் பசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள பால்கனியில் புதிய பாப்பரசர் தோன்றினால்.
புதிய புனித பாப்பரசரைக் காண, சென். பீட்டர்ஸ் சதுக்கத்தில் இலட்சக்கணக்கானோர் கூடி ஆரவாரம் செய்து, தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
"உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்!" - போப் லியோ XIV இன் முதல் வார்த்தைகள்.
லியோ XIV - அமெரிக்காவிலிருந்து இரண்டாவது போப்
முதல் அகஸ்டீனிய போப், ராபர்ட் பிரீவோஸ்ட் - இப்போது லியோ XIV - போப் பிரான்சிஸுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து இரண்டாவது ரோமானிய போப்பாண்டவர் ஆவார். இருப்பினும், ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோவைப் போலல்லாமல், 69 வயதான ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் அமெரிக்க கண்டத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவ. இருப்பினும் அவர் தொடர்ச்சியாக இரண்டு முறை அகஸ்டீனியர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்தார்.