பெரும்பான்மை அதிகாரத்தைப் பெறாத உள்ளூராட்சிமன்றங்களின் சபைகளை நிறுவுவது குறித்து
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
50 சதவீத பெரும்பான்மையைப் பெறாத உள்ளூராட்சிமன்றங்களில் சபைகளை நிறுவுவது சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளை நியமிப்பது வாக்கெடுப்பு அல்லது வேறு ஒப்பந்தங்கள் மூலம் செய்யப்பட வேண்டும் என்று அதன் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.