கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய
ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த மாணவியின் மரணத்துக்கு நீதி கோரியும் சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியும், கொழும்பில் இன்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மழைக்கு மத்தியில் ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனரை்.
இந்நிலையில் அறிக்கையொன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் விசாரணை நடவடிக்கையில் குறித்த பாடசாலை அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது என்றும் இதனையடுத்தே, ஆசிரியரை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலை அதிபருக்கு விளக்கமளிக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகை தந்த கல்வியமைச்சின் அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் புத்தளத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய பொலிஸ் விசாரணை அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையில் இதுபற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், குறித்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியுடன் தொடர்புடைய வீடியோ இணைப்புக்கள் வருமாறு,
கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம்...
https://www.facebook.com/watch/?v=1261061065443613&rdid=4xMME3wc0fLABadb
சமூக ஊடகத்தில் நீதியை தேட முடியாது.. பெற்றோர்கள் முறைப்பாடு தர இன்னும் வரவில்லை
https://www.facebook.com/watch/?v=1758569185006240&rdid=0jiw9g8xX9cY0aDW
சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும்
https://www.facebook.com/watch/?v=1029132422054701&rdid=fiIjkF7w8CFMwYK1
மாணவிக்கு அப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
https://www.facebook.com/watch/?v=501158476320492&rdid=tzZFfahTsjS4xWnx