பொருளாதாரத்திற்கு பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்காக உள்ளூர் பணச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க 115 பில்லியன்  இலங்கை மத்திய வங்கி சட்டரீதியான இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது.

கடந்தகால அரசுகள்  மத்திய வங்கி கொள்ளைக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி மத்திய வங்கி மீது நேற்று (ஜூன் 16) ஜனாதிபதியின் ஆத்திரமடைந்த கருத்தை  தொடர்ந்து இலங்கை மத்திய வங்கி  (சிபிஎஸ்எல்) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தனது முன்மொழிவை ஏற்காவிட்டால், "நாளை காலை" வங்கித் தலைவர்கள் திட்டங்களை ஒப்படைக்குமாறு நேற்று மத்திய வங்கி அதிகாரிகளிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதன்படி, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் வைப்புகளுக்கான சட்டரீதியான இருப்பு விகிதத்தை நேற்று முதல் 2% மாக குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இந்த முடிவின் மூலம், 2020 ஆம் ஆண்டில் இதுவரை சட்டரீதியான இருப்பு விகிதம் 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறைந்த செலவில் வணிகங்களுக்கான கடன் ஓட்டத்தை அதிகரிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், மத்திய வங்கி நாணய வாரியம் தொடர்ந்து பொருளாதார மற்றும் நிதி சந்தை நிலைமைகளை கண்காணித்து மேலும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கும்.

ஜனாதிபதியின் உரைக்கு மங்களவின் பதில்:

ஜூன் 16, செவ்வாயன்று ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ, "கொள்கைக்கு" மத்திய வங்கியின் ஆதரவு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தது ஒரு "நியாயமான விஷயம்" என்று கூறி இருந்தார், இதனால் பொருளாதாரம் மேம்படாது இவரின் பேச்சை நினைத்து "வெட்கப்படுகிறேன்" என்று மங்கள  கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நெருக்கடிக்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று   ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார். கடந்த ஏழு மாதங்களில் முறையான நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார மேலாண்மை இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டிறுக்கின்றதே தவிர  கொரோனா வைரசால் அல்ல, 2019 டிசம்பரில் திட்டமிடப்படாத வரி அறவிடப்பட்டதே  இதற்கு காரணம் என்றார்.

MS twite


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி