கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட நன்கொடைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் புதிய நாடாளுமன்றத்தில் முன்வைக்க தற்போதைய அரசு தயாராக உள்ளதாக ராஜபக்ஷ அரசின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறுகிறார்.

கொரோனாவை அடக்குவதற்கு உலக வங்கி கொடுத்த 230 மில்லியன் அமெரிக்க டொலருக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஐ.தே.க) தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (07) வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முன்னைய அரசாங்கத்தின் நிதி விஷயங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார், நல்லாட்சி ஆட்சியின் போது பெறப்பட்ட கடன் மறைக்கப்பட்டிருந்தது என்றும் அவர் முதலில் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நேற்று ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நடந்த கூட்டத்தில், முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களை வெளியிடாமல் அரசாங்கம் தனது பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதாகவும் கொரோனாவின் போது தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி