2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்

தேர்தலின்போது சதொச நிறுவனம் தலா 14,000 கெரம் மற்றும் சதுரங்கப் பலகைகளை இறக்குமதி செய்து விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட   இந்த வழக்கு இன்று (19) கொழும்பு உயர்நீதிமன்றில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் அழைக்கப்பட்டது.
 
பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரதீப் அபேரத்ன மற்றும் மகேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற  நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
அதன்படி, வழக்கு தொடர்பான எழுத்து மற்றும் வாய்மொழி உரைகளை வழங்குவதற்காக ஜனவரி 22ஆம் திகதி ஆஜராகுமாறு இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் பெஞ்ச் உத்தரவிட்டது.
 
இங்கு குற்றஞ்சாட்டப்பட்ட நளின் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை அவரை ஜனவரி 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதித்தது.
 
இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி