மதுபான உரிமம் பெற்றவர்களின்
பெயர்ப்பட்டியலையும் பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டுமென புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாவிட்டால் அனைவரும் பாவம் செய்பவர்களாகி விடுவார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இது தொடர்பில் நிதியமைச்சு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்தவுடன் அனைத்து விபரங்களையும் முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின்போது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி இந்த வார இறுதியில் விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.
உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறை தொடர்பில் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே புதிய ஜனநாயக முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது.
பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.