திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில்
உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்துக்கு அருகில் இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வலஸ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை