பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக
முன்னணி பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற் கொண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காஞ்சன விஜேசேகரவின் பெயரை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளதுடன், அதில் ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.