(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
மத்திய சுகாதார அமைச்சின்
செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் (20) புதன் காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்
மேலும் மாவட்ட ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப் படவுள்ளதோடு வடமாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.